பிறரன்பு பணிகளுக்கான நிதியினை சேகரிக்கும் நோக்கில் யாழ். மறைமாவட்ட புனித வின்சென்ட் டி போல் மத்திய சபையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் சந்தை நிகழ்வு ஆவணி மாதம் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் நடைபெற்றது.

சபை ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை நேசநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இச்சந்தை நிகழ்வில் மறைமாவட்ட பங்கு பந்திகளினால் அன்பளிப்பாக சேகரிக்கப்பட்ட காய்கறி வகைகள், பழங்கள், கருவாடு, தேங்காய், அரிசி, காலை உணவு, சிற்றுண்டிகள், பனை உற்பத்தி பொருட்கள், குளிர்பானங்கள், உடைகள் மற்றும் பயன்தரு மரக்கன்றுகள் போன்றவை விற்பனை செய்யப்பட்டன.

தேவையிலுள்ளோர், நோயாளிகள் மற்றும் மாணவர்களுக்கு உதவும் நோக்கில் ஏராளமானவர்கள் இச்சந்தை நிகழ்வில் கலந்து பொருட்களை கொள்வனவு செய்தனர்.

By admin