மானிப்பாய் புதுமடம் புனித கர்த்தர் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட புனித கார்மேல் அன்னை திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆவணி மாதம் 02ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆடி மாதம் 30ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 01ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை அருட்தந்தை எரோணியஸ் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை அருட்தந்தை ஸ்கரன்ராஜ் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

