எழுவைதீவு புனித தோமையார் ஆலய வளாகத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள கன்னியர் மடம் மற்றும் அனலைதீவு புனித வேளாங்கன்னி அன்னை ஆலய மணிக்கோபுரத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுகள் ஆவணி மாதம் 02ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
கன்னியர் மடம் மற்றும் மணிக்கோபுரத்திற்கான அடிக்கற்களை பங்குத்தந்தை அருட்தந்தை பொன்ராசா டினுசன் அவர்கள் நாட்டிவைத்தார்.

