தேசிய மறைக்கல்வி விவிலியப்பணி நடுநிலையத்தினால் இலங்கையின் அனைத்து மறைமாவட்டங்களிலும் பணியாற்றும் தமிழ் மொழி மூலமான மறையாசிரியர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட வதிவிட பயிற்சி ஆடி மாதம் 31ஆம் திகதி தொடக்கம் ஆவணி மாதம் 02 ஆம் திகதி வரை கொழும்பு ராகம தேவத்த தியான இல்லத்தில் நடைபெற்றது.
தமிழ் மொழிக்கு பொறுப்பான அன்புக்கன்னியர் சபை அருட்சகோதரி யோகராணி அவர்களின் ஒழுங்குபடுத்தலில் தேசிய மறைக்கல்வி இயக்குனர் அருட்தந்தை பிரதீப் நிரோஸன் பெர்னாண்டோ அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கருத்துரைகள், திருப்பலி, குழுச்செயற்பாடுகள் என்பன இடம்பெற்றன.
இந்நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட மறைக்கல்வி இயக்குனர் அருட்தந்தை கிருஸாந்த் அவர்கள் ‘தற்கால இளையோர் முகம் கொடுக்கும் சவால்களும் கத்தோலிக்க திருஅவையின் மறைக்கல்வியும்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில் 50 மறையாசிரியர்கள் கலந்துகொண்டதுடன் யாழ். மறைமாவட்டத்திலிருந்து மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குநர் அருட்தந்தை டியூக் வின்சன்ட் அவர்களின் தலைமையில் 05 மறையாசிரியர்கள் பங்குபற்றினர்.

