இலங்கை ஆயர் பேரவையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட 97, 98, 99 ஆம் ஆண்டுகளில் குருத்துவ அருட்பொழிவு பெற்ற மறைமாவட்ட மற்றும் துறவற சபை குருக்களுக்கான “மேலதிக உருவாக்கப் பயிற்சி” ஆவணி மாதம் 04ஆம் 05ஆம் திகதிகளில் கொழும்பு ராகம தேவத்தை தியான இல்லத்தில் நடைபெற்றது.

திருகோணமலை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை நோயல் இம்மானுவேல் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கருத்துரைகள், கலந்துரையாடல்கள், குழுச்செயற்பாடுகள், திருப்பலியென்பன இடம்பெற்றன.

கருத்துரைகளை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தையர்கள் செல்வரட்ணம், ஸெனில் ஜெயவர்த்தன, வைத்தியர் ஸ்ரீ ரஞ்சன் ஆகியோர் வழங்கினர்.

இந்நிகழ்வில் கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் பேரருட்தந்தை அன்ரனி ஜெயக்கொடி, சிலாபம் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை விமல் ஸ்ரீ ஜெயசூர்ய, மறைமாவட்ட மற்றும் துறவற சபை குருக்களென 40 வரையானவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

By admin