குடும்பங்களுக்கான சிறப்பு விழிப்புணர்வு கருத்தமர்வு ஆடி மாதம் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அல்லைப்பிட்டி புனித யுவானியார் ஆலயத்தில் நடைபெற்றது.
தீவக மறைக்கோட்ட முதல்வரும் அல்லைப்பிட்டி பங்குத்தந்தையுமான அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங்க் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அகவொளி குடும்பநல நிலைய இயக்குநர் அருட்தந்தை மனுவேல்பிள்ளை டேவிட் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திருப்பலியும் தொடர்ந்து கருத்துரைகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் ஊரும்பிராய் கத்தோலிக்கப் பாடசாலை அதிபர் திரு. இக்னேஸியஸ் அவர்களின் குடும்ப வாழ்வு மற்றும் தற்காலத்தில் குடும்பங்கள் எதிர்நோக்கும் சவால்கள்; தொடர்பான சிறப்புரையும் விழிப்புணர்வு படக்காட்சியும் கலந்துரையாடலும் இடம்பெற்றன.
யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்பநல நிலையமும் கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களமும் இணைந்து முன்னெடுத்த இந்நிகழ்வில் பங்குமக்கள் பலரும் பங்குபற்றி பயனடைந்தனர்.

