மன்னார் மறைமாவட்ட மரியாயின் சேனை தலைமன்னார் கியூரியா ஆச்சேஸ் விழா ஆடி மாதம் 08ஆம் திகதி கடந்த புதன்கிழமை தலைமன்னார் புனித லோறன்சியார் ஆலயத்தில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை பஸ்ரியன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் சபை ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை அகஸ்ரின் புஸ்பராஜ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திருச்செபமாலை, சிறப்பு பவனி, மரியாயின் சேனை சங்கிலி செபம், திருப்பலி, அர்ப்பண வாக்குறுதிகளை புதுப்பித்தல், நற்கருனை ஆராதனை என்பன இடம்பெற்றன.
இந்நிகழ்வுகளில் 75ற்கும் அதிகமான சேனை அங்கத்தவர்கள் கலந்துகொண்டனர்.

