நாரந்தனை புனித பேதுரு பவுல் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆனி மாதம் 29ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது.
20ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை தீவக மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங்க் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

