தனிப்பனை செம்பியன்பற்று மடுமாதா யாத்திரைத்தல வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஆதர் யஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆடி மாதம் 02ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது.
01ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றப்பட்டு நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை ஸ்ரனி சுவாம்பிள்ளை அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

