சுன்னாகம் புனித அந்தோனியார் முன்பள்ளி சிறார்களின் சந்தை நிகழ்வு ஆனி மாதம் 21ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய வளாகத்தில் நடைபெற்றது.

சிறார்களின் விற்றல் வாங்கல் திறனை மேம்படுத்தும் நோக்கோடு முன்பள்ளி ஆசிரியர்கள் திருமதி பேனாட் கலஸ்ரின் மற்றும் திருமதி றெக்ஸலா ஆகியோரின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இச்சந்தை நிகழ்வை சுன்னாகம் பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின்ஸ் அவர்கள் ஆரம்பித்துவைத்தார்.

இந்நிகழ்வில் சிறார்களால் காலை உணவு, சிற்றூண்டிகள், மரக்கறி, பழங்கள் , ஆடைகள், குளிர்பானங்கள், அழகுசாதன பொருட்கள் போன்றவை விற்பனை செய்யப்பட்டன.

அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை அல்றின், அருட்சகோதரி டிலானி, ஆசிரியர்கள், பெற்றோர்கள், பங்குமக்கள், நலன்விரும்பிகளென பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

By admin