அக்கராயன் பங்கின் ஸ்கந்தபுரம் புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை அல்பேன் சேகர் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆனி மாதம் 20ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.

13ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை மரிய செபஸ்ரியன் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை கொக்கிளாய் பங்குத்தந்தை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை யோகராஜ் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

திருவிழா திருப்பலியில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பங்கு மக்கள், பிறசமய மக்களென பலரும் கலந்துசெபித்தனர்.

By admin