வெற்றிலைக்கேணி புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை விமலசேகரன் வசந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆனி மாதம் 22ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.
13ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை நாவாந்துறை பங்கின் உதவிப்பங்குத்தந்தை அருட்தந்தை ஸ்ரனிஸ்லொஸ் ஸ்ரிபன்ராஜ் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட நிதி முகாமையாளர் அருட்தந்தை நேசநாயகம் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.
திருவிழா மற்றும் ஆயத்தநாள் மறையுரைகளை இந்தியாவிலிருந்து வருகைதந்த திருச்சி மறைமாவட்ட அருட்தந்தை அல்பேட் அவர்கள் வழங்கியிருந்தார்.
திருவிழா திருப்பலி நிறைவில் புனிதரின் திருச்சொருப பவனியும் ஆசீர்வாதமும் இடம்பெற்றன.

