சுவிஸ் தமிழ் கத்தோலிக்க ஆன்மிகப் பணியகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட அயின்சீடல்ன் கறுப்பு மாதா திருவிழா பணியக இயக்குநர் அருட்தந்தை யூட்ஸ் முரளிதரன் அவர்களின் ஒழுங்குப்படுத்தலில் ஆனி மாதம் 21ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவிழா திருப்பலியை இங்கிலாந்து தமிழ் கத்தோலிக்க ஆன்மிகப் பணியக இயக்குநர் அருட்தந்தை எல்மோ அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
திருவிழா திருப்பலி நிறைவில் அன்னையின் திருச்சொருப பவனியும் ஆசீர்வாதமும் இடம்பெற்றன.
இத்திருப்பலியில் அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த பணியக இறைமக்கள் பக்தியுடன் பங்குபற்றினர்.

