சுவிஸ்லாந்து பாசல் தமிழ் கத்தோலிக்க பணியக இறைமக்களின் பாதுகாவலர் புனித அந்தோனியார் திருவிழா பணியக இயக்குநர் அருட்தந்தை யூட்ஸ் முரளிதரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆனி மாதம் 14ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவிழா திருப்பலியை மன்னார் மறைமாவட்ட அருட்தந்தை அன்ரனி சோசை அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
இத்திருப்பலியில் பணியகத்தின் அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த இறைமக்கள் பக்தியுடன் பங்குபற்றியிருந்தனர்.

