இலங்கை – ஜேர்மனி நட்புறவு திட்டத்தின் அடிப்படையில் “பாடசாலைகள் எதிர்காலத்திற்கான பங்காளிகள்” என்னும் முயற்சியின் கீழ் கோத்தே நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச இளைஞர் முகாம் ஜேர்மனி சென் பீட்டர்ஸ் திடலில் நடைபெற்றுவருகின்றது.

ஆனி மாதம் 7ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்றுவரும் இம்முகாமில் மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சிகள், பயிலரங்குகள், விளையாட்டுகள், திரைப்படங்கள், பாரம்பரிய உலகளாவிய உணவுகளை சமைத்தல், மற்றும் தத்தமது கலாசார பாரரம்பரியங்களை பிறருடன் பகிர்ந்து கொள்ளுதல் போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றுவருகின்றன.

இம்மாதம் 27ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள இம்முகாமில் 900 சர்வதேச மாணவர்கள் பங்குபற்றியுள்ளதுடன் இலங்கை நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தி 07 மாணவர்களும் அவர்களுள் ஒருவராக யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மாணவன் செல்வன்; துஜிஸ் அவர்களும் கலந்துகொண்டுள்ளார்.

By admin