வட மாகாண பண்பாட்டு அலுவல்கள் அலகின் அனுசரணையில் மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட பதிவுசெய்யப்பட்ட கலை மன்றங்களுக்கிடையிலான மாவட்ட மட்ட கிராமிய குழுப்பாடல் போட்டி ஆனி மாதம் 16ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை மன்னார் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
மன்னார் மாவட்ட சிரேஸ்ட கலாசார உத்தியோகத்தர் நித்தியானந்தன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இப்போட்டியில் நானாட்டான் புனித கார்மேல் அன்னை கலாமன்றம் முதலாமிடத்தையும், மடு கலையருவியின் கட்டையடம்பன் கிளை மன்றம் இரண்டாமிடத்தையும் மன்னார் கலையருவி கலைஞர் மன்றம் மூன்றாமிடத்தையும் மாந்தை மேற்கு கலை கலாசார மன்றம் நான்காமிடத்தையும் முசலி புனித யோசப்வாஸ் கலைமன்றம் ஐந்தாமிடத்தையும் பெற்றுக்கொண்டன.
இந்நிகழ்வில் மேலதிக மாவட்ட செயலாளர் திரு. பிரதீப், அனர்த்த முகாமைத்துவ சேவைகள் உதவிப் பணிப்பாளர் திரு. திலீபன், மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் திருமதி. றெவெல், கலையருவி மைய இயக்குநர் அருட்தந்தை லக்ஸ்ரன், கலாசார உத்தியோகத்தர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

