மன்னார் மறைமாவட்டம் தள்ளாடி புனித அந்தோனியார் திருத்தல வருடாந்த திருவிழா திருத்தலப் பரிபாலகர் அருட்தந்தை வசந்தகுமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆனி மாதம் 13ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
திருவிழா திருப்பலியை மன்னார் மறைமவட்ட குருமுதல்வர் அருட்தந்தை தமிழ்நேசன் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
திருப்பலி நிறைவில் புனிதரின் திருச்சுரூபம் பவனியும் கடற்கரை ஆசிர்வதிப்பும் இடம்பெற்றது.
இத்திருப்பலியில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அருட்சகோதரர்கள், இறைமக்களென பலரும் கலந்துசெபித்தனர்.

