மன்னார் மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட குருக்களுக்கான புனிதப்படுத்தல் நிகழ்வு ஆனி மாதம் 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை இயேசுவின் திருஇருதய பெருவிழாவன்று நடைபெற்றது.
மன்னார் மறைமாவட்டத்தில் மன்னார், முருங்கன், மாந்தை, மடு, வவுனியா ஆகிய மறைக்கோட்டங்களில் மறைக்கோட்ட ரீதியாக அனைத்து குருக்களும் இணைந்து தமது குருத்துவ வாழ்வை புனிதப்படுத்தி நற்கருணை ஆராதனையுடன் இணைந்த தியானத்தில் கலந்துகொண்டனர்.

