நீர்கொழும்பு புனித செபஸ்தியார் ஆலய மரியாயின் சேனையினர் இணைந்து முன்னெடுத்த கள அனுபவ பயணம் ஆனி மாதம் 15,16ஆம் திகதிகளில் நடைபெற்றது.
உதவிப் பங்குத்தந்தை அருட்தந்தை நிக்சன் சமீர மற்றும் தியாக்கோன் டினோஸன் ஆகியோரின் வழிநடத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சேனையினர் யாழ். மறைமாவட்டத்தை தரிசித்து அங்குள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்களையும் இடங்களையும் பார்வையிட்டதுடன் 15ஆம் திகதி திங்கட்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்திற்கு விஜயம் மேற்கொண்டு மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் அவர்களின் இறையாசீரையும் பெற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்வில் 90ற்கும் அதிகமான மரியாயின் சேனை அங்கத்தவர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

