போராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட “சமகால அரசியலும் போராளிகளின் வகிபாகமும்” மாநாடு ஆனி மாதம் 16ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சியில் நடைபெற்றது.

ஈகைச்சுடரேற்றப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில் அகவணக்கம், மலரஞ்சலி என்பவற்றுடன் வரலாற்றின் வேர்கள் விருது வழங்கும் நிகழ்வு, சிறப்புரைகள் என்பனவும் இடம்பெற்றன.

இவ்விருது வழங்கும் நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருவும் மனித உரிமை செயற்பாட்டாளரும், வடக்கு கிழக்கு மனித உரிமை அலுவலக பணிப்பாளருமாக யுத்தகாலத்தில் பணியாற்றி கொல்லப்பட்ட அருட்தந்தை அமரர் மரிய சேவியர் கருணாரட்ணம் அவர்களுக்கும் “வரலாற்றின் வேர்கள்” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சமய தலைவர்கள், அரசியல் தலைவர்கள், போராளிகளின் உறவினர்கள், பொதுமக்களென பலரும் கலந்துகொண்டனர்.

By admin