திருமண வாழ்வில் 25 வருடங்கள் நிறைவுகண்ட தம்பதியினரை கௌரவித்து இரணைப்பாலை பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு வைகாசி மாதம் 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை அஜித் சுலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் தம்பதிகள் பிள்ளைகளால் மாலை அணிவிக்கப்பட்டு பாண்ட் வாத்தியத்துடன் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்டதைத் தொடர்ந்து யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் தலைமையில் நன்றி திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இத்திருப்பலியில் தம்பதிகள் தங்கள் திருமண வாக்குறுதிகளை புதுப்பித்துக்கொண்டதுடன் திருப்பலி நிறைவில் அவர்களுக்கான கௌரவிப்புக்களும் இடம்பெற்றன.

கௌரவிப்பு நிகழ்வில் கேக் வெட்டப்பட்டு அவர்களுக்கான நினைவுச்சின்னம் வழங்கிவைக்கப்பட்டதுடன் அருட்தந்தையர்களின் ஆசியுரையும் தம்பதிகளின் அனுபவப்பகிர்வும் நடைபெற்றன. இந்நிகழ்வில் 113 தம்பதியினர் கலந்துகொண்டனர்.

அத்துடன் 2025ஆம் ஆண்டிற்கான தேசிய திருவிவிலிய தேர்வில் சிறப்பு சித்திகளை பெற்ற 13 மாணவர்களுக்கான சான்றிதழ்களும் பதக்கங்களும் அன்றைய தினம் வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் முல்லைத்தீவு மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை இராஜசிங்கம், அருட்தந்தையர்கள், இறைமக்களென பலரும் கலந்துகொண்டனர்.

 

By admin