தேசிய குடும்ப ஆணைக்குழு பொதுக்கூட்டம் ஆனி மாதம் 04,05ஆம் திகதிகளில் இரத்தினபுரி மறைமாவட்டத்தில் நடைபெற்றது.
தேசிய குடும்ப ஆணைக்குழுவிற்கு பொறுப்பான காலி மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை றேய்மன்ட் கிங்சிலி விக்ரமசிங்க அவர்களின் வழிகாட்டலில் தேசிய இயக்குநர் அருட்தந்தை ஜெகான் குணதிலக அவர்களின் ஒழுங்குபடுத்தலில் சூரியகந்த தியான இல்லத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
முதல்நாள் நிகழ்வில் பேரருட்தந்தை றேய்மன்ட் கிங்சிலி விக்ரமசிங்க அவர்கள் ஆரம்ப உரையை வழங்கியதுடன் தொடர்ந்து கடந்த கூட்ட அறிக்கை சமர்ப்பித்தல், மறைமாவட்ட அறிக்கைகள் சமர்ப்பித்தல், கலந்துரையாடல், வெளிக்கள பணயம், திருச்செபமாலை என்பவற்றுடன் மாலை மகிழ்வூட்டல் நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இரண்டாம் நாள் நிகழ்வுகள் 05ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அன்றைய தினம் கொழும்பு மறைமாவட்ட குடும்ப ஆணைக்குழுவின் தமிழ்மொழிக்கு பொறுப்பான அருட்தந்தை பிரகாஸ் அவர்களின் தலைமையில் திருப்பலியும் தொடர்ந்து பொதுக்கூட்டமும் கருத்துரைகளும் இடம்பெற்றன.
கருத்துரைகளை திரு. சோனல் பெரேரா மற்றம் திருமதி நெத்மி பெரேரா ஆகியோர் இலங்கை நாட்டில் கரு அழிப்பின் தாக்கங்களும் திருச்சபை எடுக்க வேண்டிய முயற்சிகளும் என்னும் தலைப்பில் வழங்கியிருந்தனர்.
இந்நிகழ்வில் 12 மறைமாவட்ட ஆணைக்குழு இயக்குநர்கள், தம்பதிகளென 36 வரையானவர்கள் கலந்துகொண்டனர்.

