தொடர்பாடலாண்டு சிறப்பு நிகழ்வாக யாழ். மறைமாவட்டத்தில் பணியாற்றும் துறவற சபை குருக்கள் துறவிகளை இணைத்து முன்னெடுக்கப்பட்ட சிறப்பு கருத்தமர்வு ஆனி மாதம் 06ஆம் திகதி சனிக்கிழமை யாழ். அகவொளி குடும்பநல நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.
யாழ். மறைமாவட்ட துறவற சபை குருக்கள் துறவிகள் மன்ற தலைவர் திருவுள பணியாளர் சபை அருட்தந்தை பிராங் டவ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் அவர்கள் கலந்து திருத்தந்தை 14ஆம் லியோ அவர்களின் “மகத்துவமுள்ள மனுக்குலம்” சுற்றுமடல் தொடர்பாகவும் யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடகமைய இயக்குனர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் அவர்கள் கலந்து நவீன தொடர்பாடலும் அதனால் உருவாகும் சவால்களும் தொடர்பாகவும் கருத்துரை வழங்கினர்.
இந்நிகழ்வில் 60ற்கும் அதிகமான குருக்கள், துறவிகள் பங்குபற்றி பயனடைந்தனர்.

