பருத்தித்துறை புனித தோமையார் மற்றும் புனித அந்தோனியார் ஆலயங்களை சேர்ந்த முதல்நன்மை அருட்சாதனத்திற்கு தயார்ப்படுத்தும் பிள்ளைகளுக்கான பாசறை வைகாசி மாதம் 23ஆம் திகதி கடந்த சனிக்கிழமை தும்பளை புனித லூர்து அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது.

பருத்தித்துறை மறைக்கோட்ட முதல்வரும் பங்குத்தந்தையுமான அருட்தந்தை கிருபாகரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பருத்தித்துறை பங்கின் நிரந்தர மறையாசிரியர் திரு. ஜெயசீலன் அவர்கள் வளவாளராக கலந்து மாணவர்களை வழிப்படுத்தினார்.

இந்நிகழ்வில் பருத்தித்துறை பங்கின் உதவிப்பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரன் கஜீஸ்காந்த் மற்றும் மறையாசிரியர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் 34 சிறார்கள் பங்குபற்றியிருந்தனர்.

By admin