யாழ். சுண்டுக்குளி மகளிர் கல்லூரி ஆங்கில தின விழா, வைகாசி மாதம் 23ஆம் திகதி சனிக்கிழமை கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

கல்லூரி அதிபரும் மன்றக் காப்பாளருமான திருமதி துஸ்யந்தி துசீதரன் அவர்களின் வழிநடத்தலில் ஆங்கில மன்றத் தலைவர் செல்வி வத்சலா விமல் அவர்களின் தலைமையில் எகிப்திய பண்பாட்டை மையப்படுத்தி நடைபெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும் பேச்சு, பாடல், எழுத்துப் போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கான சான்றிதழ் வழங்கலும் இடம்பெற்றன.

கலைநிகழ்வுகளில் மாணவர்களால் ஆங்கில குழுப் பாடல், தனிப் பாடல், உரை வீச்சு என்பன அளிக்கை செய்யப்பட்டதுடன் சிறப்பு நிகழ்வாக மிகப் பண்டைய எகிப்திய நாகரிகம் பற்றிய “The Glint of Gold” ஆங்கில இசை நாடகமும் மேடையேற்றப்பட்டது.

இந்நிகழ்வில் “அகவொளி” குடும்பநல நிலைய இயக்குனர் அருட்தந்தை மனுவேற்பிள்ளை டேவிட் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.

By admin