தமிழ் இன அழிப்பு வரலாற்றையும், அவர்கள் கடந்து வந்த துயரமிக்க வலிகளையும் இளம் தலைமுறையினருக்குத் கொண்டு சேர்க்கும் நோக்கில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட “நினைவாயுதம் – தமிழின வலிகளின் ஏடு” வரலாற்று ஆவணக் கண்காட்சி வைகாசி வைகாசி மாதம் 16ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய கட்டடத் தொகுதியில் நடைபெற்றது.
இக்கண்காட்சியில் தமிழ் மக்களின் வரலாற்றுப் பதிவுகள், ஈழப்போராட்ட கால ஆவணங்கள், நினைவுப் பொருட்கள் மற்றும் முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின் போது தமிழ் மக்கள் எதிர்கொண்ட பேரவலங்களைச் சித்தரிக்கும் அரிய புகைப்படங்கள் மற்றும் ஆவணங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
இக்கண்காட்சியை பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களென பலரும் பார்வையிட்டனர்.

