புனரமைப்பு செய்யப்பட்ட சுண்டுக்குளி புனித திருமுழுக்கு யோவான் ஆலய பீட மற்றும் பீடப்பகுதி அபிஸேக நிகழ்வு வைகாசி மாதம் 23ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் அவர்கள் கலந்து புனரமைக்கப்பட்ட பீடத்தை ஆசீர்வதித்து திறந்துவைத்து திருப்பலி ஒப்புக்கொடுத்தார்.

இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் மற்றும் பங்குமக்கள் கலந்துகொண்டதுடன் திருப்பலி நிறைவில் இப்புனரமைப்பு பணிக்கான நிதியுதவியை வழங்கிய திரு. ஒலிவர் பெர்னான்டோ அவர்களுக்கான கௌரவிப்பும் இடம்பெற்றது.

By admin