கரம்பொன் புனித வேளாங்கன்னி அன்னை யாத்திரைத்தல வருடாந்த திருவிழாவிற்கான ஆயத்தங்கள் பங்குத்தந்தை அருட்தந்தை தயாகரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வருகின்ற 25ஆம் திகதி திங்கட்கிழமை இன்று கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி தினமும் மாலை 05:00 மணிக்கு திருச்செபமாலையுடன் திருப்பலி இடம்பெறுமெனவும் 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 05:30 மணிக்கு நற்கருணைவிழாவும் 30ஆம் திகதி சனிக்கிழமை காலை 06.45 மணிக்கு யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் திருவிழா திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்படுமென அருட்தந்தை தயாகரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் 31ஆம் திகதி இடம்பெறும் இத்திருவிழா அன்றைய தினம் மூவொரு இறைவன் திருவிழா காரணமாக வைகாசி மாதம் 30ஆம் சனிக்கிழமை இடம்பெறவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin