முல்லைத்தீவு அளம்பில் புனித அந்தோனியார் ஆலயத்தில் மரியாயின் சேனை “நல்ல ஆலோசனை மாதா பிரசீடியம்” ஆரம்பிக்கப்பட்டதன் 25வது ஆண்டு நிறைவு நன்றி திருப்பலி வைகாசி மாதம் 16ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை எமில் போல் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட மரியாயின் சேனை கொமிற்சிய ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் தலைமையில் திருப்பலியும் தொடர்ந்து செபமலர் வெளியீடும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட மரியாயின் சேனை கொமிற்சிய தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் முல்லைத்தீவு மறைக்கோட்ட மரியாயின் சேனை அங்கத்தவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

அளம்பில் புனித அந்தோனியார் ஆலயத்தில் 2001ஆம் ஆண்டு அப்போதைய பங்குதந்தை அருட்தந்தை யூட் அமலதாஸ் அவர்களின் பணிக்காலத்தில் “நல்ல ஆலோசனை மாதா பிரசீடியம்” என்னும் பெயரில் மரியாயின் சேனை ஆரம்பித்துவைக்கப்பட்டது.

By admin