உரோமாபுரியிலிருந்து வருகைதந்த டொண் பொஸ்கோ சலேசிய சபை தலைவர் அருட்தந்தை பாபியோ அட்டார்ட் அவர்கள் இலங்கை நாட்டின் பல பகுதிகளிலுமுள்ள டொண் பொஸ்கோ சலேசிய பணித்தளங்களை தரிசித்துள்ளார்.
வைகாசி மாதம் 14ஆம் திகதி வியாழக்கிழமை இலங்கை நாட்டை வந்தடைந்த இவர் இலங்கையின் தென் பகுதியிலுள்ள சலேசிய இல்லங்களை தரிசித்து அங்கு இடம்பெற்ற நிகழ்வுகளில் கலந்துகொண்டார்.
தொடர்ந்து 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி டொண் பொஸ்கோ நிறுவனத்தை தரிசித்து அங்கு இடம்பெற்ற கலைநிகழ்வுகளிலும் கலந்துரையாடலிலும் பங்குபற்றினார்.
இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம், சபை மாகாண முதல்வர், உப மாகாண முதல்வர், வடக்கில் பணியாற்றும் சலேசிய இல்ல அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், இளையோர், Infotech மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்களென பலரும் கலந்துகொண்டனர்.

