சுன்னாகம் ஏழாலை புனித இசிதோர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் வைகாசி மாதம் 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
08ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 16ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா நடைபெற்றது.
திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை யோசப்தாஸ் ஜெபரட்ணம் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை இளவாலை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை யேசுதாஸ் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

