புனித பத்திரிசியார் கல்லூரி மூன்றாம் நிலை உயர் பட்டப்படிப்புக்கள் நிலைய நிர்வாக அலகு கட்டட திறப்புவிழா வைகாசி மாதம் 13ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது.

மறைமாவட்ட நிதிமுகாமையாளர் அருட்தந்தை நேசநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அகவொளி குடும்பநல நிலைய இயக்குனர் அருட்தந்தை மனுவேற்பிள்ளை டேவிட் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து கட்டடத்தை ஆசீர்வதித்து திறந்துவைத்தார்.

இக்கட்டடத்திற்கான அடிக்கல் 2023ஆம் ஆண்டு ஆடி மாதம் அப்போதைய இலங்கைக்கான திருத்தந்தையின் திருத்தூது பிரதிநிதி பேரருட்தந்தை பிறைன் உடேக்குவே அவர்களால் நாட்டிவைக்கப்பட்டது.

By admin