ஊர்காவற்துறை புனித சூசையப்பர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சாள்ஸ் ஜஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் வைகாசி மாதம் 01ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சித்திரை மாதம் 22ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் 30ஆம் திகதி வியாழக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குனர் அருட்தந்தை டியூக் வின்சன்ட் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை நாரந்தனை பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

திருவிழா திருப்பலியின் நிறைவில் புனிதரின் திருச்சொருப பவனியும் ஆசீர்வாதமும் இடம்பெற்றது.

அத்துடன் திருவிழாவை சிறப்பித்து புனித ஜோசப்வாஸ் இளையோர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வைகாசி மாதம் 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை புனித சூசையப்பர் ஆலய மக்களின் அனுசரணையுடன் ஆலய வளாகத்தில் பங்குமக்களுக்கான பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றன.

By admin