யாழ்ப்பாணம் கொய்யாத்தோட்டம் பங்கிற்குட்பட்ட ஈச்சமோட்டை புனித பற்றிமா அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை இராஜேந்திரம் ஸ்ரலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் வைகாசி மாதம் 13ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது.

09ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 12ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை டேமியன் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை யாழ். மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

By admin