சுவிஸ்லாந்து பேர்ண் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட பேர்ண் பணியக இறைமக்களின் பாதுகாவலர் புனித யோசேப்பு திருவிழா பணியக இயக்குநர் அருட்தந்தை யூட்ஸ் முரளிதரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் வைகாசி மாதம் 10ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவிழா திருப்பலியை அருட்தந்தை ஸ்கரன்ராஜ் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார். திருப்பலி நிறைவில் புனிதரின் திருச்சொருப பவனியும் ஆசீர்வாதமும் இடம்பெற்றன.
தொடர்ந்து அன்னையர் தின சிறப்பு நிகழ்வும் முன்னெடுக்கப்பட்டதுடன் இந்நிகழ்வில் பிள்ளைகள் தங்கள் அன்னையர்களுக்கு பூக்கொடுத்து அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இத்திருப்பலியில் பேர்ண் பணியக இறை மக்களுடன் ஏனைய பணியக இறைமக்களும் கலந்துசெபித்தனர்.

