மறைமாவட்ட ரீதியாக பங்குகளில் இறை அழைத்தலை ஊக்குவிக்கும் முகமாக பங்கு மாணவர்களை இணைத்து திருகோணமலை மறைமாவட்டம் உப்புவெளி புனித ஜோசேவாஸ் சிறிய குருமடத்தில் முன்னெடுக்கப்பட்ட “வந்து பாருங்கள்” இறை அழைத்தல் முகாம் வைகாசி மாதம் 08ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி வரை நடைபெற்றது.
குருமட அதிபர் அருட்தந்தை யூட் சர்வானந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருப்பலி, ஆன்மீக உரைகள், குழு கலந்துரையாடல், அனுபவ பகிர்வு, விளையாட்டுக்கள், பாவசங்கீர்த்தனம், நற்கருணை ஆராதனை, மகிழ்வூட்டல் நிகழ்வுகள் என்பன இடம்பெற்றன.
ஆன்மீக உரைகளை இயேசு சபை அருட்தந்தை அற்புதா, அருட்தந்தை எமர்சன் ராகல், அருட்தந்தை டன்ஸ்ரன், அருட்தந்தை சேவியர் ரஜீவா ஆகியோர் வழங்கியிருந்தனர்.
இறுதிநாள் நிகழ்வில் திருகோணமலை மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை றொபின்சன் போல் அவர்களின் தலைமையில் திருப்பலியும் தொடர்ந்து பங்கேற்பாளர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் திருகோணமலை மறைமாவட்ட பங்குகளை சேர்ந்த 32 மாணவர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

