மன்னார் மறைமாவட்ட மரியாயின் சேனை மடுமாதா கியூரியா ஆச்சேஸ் விழா வைகாசி மாதம் 09ஆம் திகதி கடந்த சனிக்கிழமை பேசாலை புனித வெற்றநாயகி ஆலயத்தில் நடைபெற்றது.

சபை ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை அகஸ்ரின் புஸ்பராஜ் அவர்களின் வழிநடத்தலில் கியூரியா ஆன்மீக இயக்குநரும் பேசாலை பங்குத்தந்தையுமான அருட்தந்தை சத்தியராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திருச்செபமாலை, சிறப்பு பவனி, மரியாயின் சேனை சங்கிலி செபம், திருப்பலி, அர்ப்பண வாக்குறுதிகளை புதுப்பித்தல், நற்கருனை ஆராதனை என்பன இடம்பெற்றன.

யோசேவ்வாஸ் நகர், ஓலைத்தொடுவாய், கரிசல், சிறுத்தோப்பு, காட்டாஸ்பத்திரி, பேசாலை ஆகிய பிரசீடியங்கள் ஒன்றாக இணைந்த இந்நிகழ்வுகளில் 200ற்கும் அதிகமான சேனை அங்கத்தவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.

 

 

 

By admin