யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட இரண்டாம் கட்ட மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வுப்பணிகள் சித்திரை மாதம் 27ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றன.
யாழ்ப்பாண நீதிமன்ற நீதிவான் செல்வநாயகம் லெனின்குமார் அவர்களின் மேற்பார்வையில் இப்பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
45 நாட்கள் நடைபெற்ற இரண்டாம் கட்ட அகழ்வுப்பணியின் நிறைவில்; 240 இற்கும் அதிகமான மனித எலும்புத்தொகுதிகள் மீட்கப்பட்ட நிலையில் தற்போதைய மூன்றாம் கட்ட அகழ்வில் எண்ணிக்கை 259 ஆக உயர்ந்துள்ளது.
அகழாய்வின்போது குழந்தைகளின் எலும்புக்கூடுகள், பால் குடுவைகள், விளையாட்டு பொருட்கள், ஆடைகள், நாணயங்கள் மற்றும் நகைகள் போன்ற பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

