மெக்சிக்கோ நாட்டில் ஆரம்பிக்கப்பட்ட துறவற சபையான வார்த்தையின் ஊழியர் சபை அருட்சகோதரிகள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் வைகாசி மாதம் 04ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்ற இச்சந்திப்பில் மட்டக்களப்பு மறைமாவட்டத்தில பணியாற்றிவரும் அருட்சகோதரி மிர்னா போர்ரில்லா, ஜோசஃபா பெரெஸ், அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை அல்றின் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அத்துடன் இந்தியாவிலிருந்து வருகைதந்த செபமாலை தாசர் சபைக்கான வத்திக்கான் நாட்டு மேற்பார்வையாளர் அருட்தந்தை சார்ல்ஸ் செராவ் மற்றும் 512 காலாட்படை பிரிவின் கட்டளைத்தளபதி கேணல் லங்கா அத்துகோரல ஆகியோரும் மறைமாவட்ட ஆயர் அவர்களை வைகாசி மாதம் 06ஆம் திகதி கடந்த புதன்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

