யாழ். மறைமாவட்ட குருவும் மல்வம் – உடுவில் பங்குத்தந்தையுமான அருட்தந்தை அலெக்சிஸ் அருட்செல்வன் அவர்களின் குருத்துவ 25வது ஆண்டு யூபிலி நிகழ்வு வைகாசி மாதம் 07ஆம் திகதி வியாழக்கிழமை நவாலி புனித பேதுரு பாவிலு ஆலயத்தில் நடைபெற்றது.
நவாலி பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயரஞ்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அருட்தந்தை அலெக்சிஸ் அருட்செல்வன் அவர்களின் தலைமையில் நன்றித்திருப்பலியும் தொடர்ந்து அருட்தந்தைக்கான கௌரவிப்புக்கள் இடம்பெற்று அருட்தந்தையின் குருத்துவ யூபிலி தினத்தை நினைவுகூர்ந்து வெள்ளிவிழா மலரும் வெளியிட்டுவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம், குருக்கள், துறவிகள், இறைமக்கள், அருட்தந்தையின் குடும்ப உறவினர்களென பலரும் கலந்துகொண்டனர்.

