நாடகத்துறையில் ஆர்வமுள்ளவர்களின் நாடாக செயல்முறை சார்ந்த தேர்ச்சியினை மேம்படுத்தும் நோக்கில் திருமறைக் கலாமன்ற நாடகப்பயிலகத்தால் நடத்தப்படும், நாடக அரங்கியலுக்கான சான்றிதழ் கற்கைநெறியின், புதிய பிரிவுக்கான வகுப்புக்கள் வருகின்ற 16ஆம் திகதி சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ளன.

நாடகக்கலையில் ஆர்வம் உள்ளவர்களும் கா.பொ.த சாதாரண மற்றும் உயர்தரத்தில் நாடகமும் அரங்கியல் பயிலும் ஆர்வமுள்ள மாணவர்களும் இக்கற்கைநெறியில் இணைந்துகொள்ள முடியுமெனவும் ஆறு மாதங்களைக் கொண்ட இப்பயிற்சிநெறிக்கான வகுப்புகள் சனி, ஞாயிறு தினங்களில் மாலை 3.30 மணி தொடக்கம் 5.30 மணி வரை யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள மன்ற கலைத்தூது மணிமண்டபத்தில் நடைபெறுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சிநெறியில் இணைந்து கொள்ள விரும்புபவர்கள் திருமறைக் கலாமன்ற அலுவலகத்தில் விண்ணப்பப்படிவங்களை பெற்று எதிர்வரும் 15ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்கு முன் சமர்ப்பிக்க வேண்டும்.

இக்கற்கை நெறியில் நாடக எழுத்துருவாக்கம், நடிப்பு, நெறியாள்கை, அரங்கத் துணைக்கலைகளான வேட உடை, ஒப்பனை, காட்சி விதானிப்பு, இசை, ஒளி விதானிப்பு, நாடகத் தயாரிப்பு, கூத்துப் பயிற்சிகள் போன்றவை உள்ளடக்கப்பட்டுள்ளன.

By admin