யாழ்ப்பாண கல்வி வலயத்திற்குட்ட பாடசாலைகளின் 20 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான காற்பந்தாட்டப் போட்டி வைகாசி மாதம் 04ஆம் திகதி திங்கட்கிழமை யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியின் இறுதியாட்டத்தில் போட்டியிட்ட யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி அணி சென் ஜோண்ஸ் கல்லூரி அணியை 02:00 என்ற கோல்கணக்கில் வென்று சம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
அத்துடன் யாழ்ப்பாண கல்வி வலயத்திற்குட்ட பாடசாலைகளின் 16, 18 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான காற்பந்தாட்டப் போட்டி வைகாசி மாதம் 05ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
16 வயதிற்குட்பட்ட போட்டியின் சமநிலை இறுதியாட்டத்தில் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி அணி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியை 05:04 என்ற கோல் கணக்கில் வென்று சம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
18 வயதிற்குட்பட்ட அணிகளுக்கான போட்டியின் இறுதியாட்டத்தில் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி அணி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியை 01:00 என்ற கோல்கணக்கில் வென்று சம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

