யாழ். கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரியின் 2026ஆம் கல்வியாண்டிற்கான இல்ல மெய்வல்லுனர் போட்டி வைகாசி மாதம் 07ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
அருட்தந்தை குயின்சன் பெர்னான்டோ அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கல்லூரி அதிபர் அருட்தந்தை பெற்றுஸ் தயாபரன் அவர்களின் தலைமையில் தியோகு, பொன்னையா என இரு இல்லங்களாக பிரித்து நடாத்தப்பட்ட இப்போட்டியில் 100M, 200M, 400M ஓட்டம், கயிறிழுத்தல், மெதுவான சைக்கிள் ஓட்டப்போட்டி, வினோத உடை போட்டிகள், புனித மடுத்தீனார் சிறிய குருமட மாணவர்கள், அமலமரித்தியாகிகள் சபை புனித வளனார் சிறிய குருமடம், மற்றும் திருவுளப்பணியாளர் சபை சிறிய குருமட மாணவர்களுக்கான அஞ்சலோட்டம் என்பன இடம்பெற்றதுடன் விளையாட்டு போட்டியை முன்னிட்டு நடாத்தப்பட்ட விளையாட்டுக்கள் மற்றும் அன்றைய தினம் நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.
இப்போட்டிகளில் தியோகு இல்லம் வெற்றிபெற்றதுடன் இந்நிகழ்வில் புதுக்குடியிருப்பு றோ.க வித்தியாலய அதிபர் அருட்தந்தை றொபின்சன் ஜோசப் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.

