யாழ். மறைமாவட்ட குருவும் புதுக்குடியிருப்பு பங்குத்தந்தையுமான அருட்தந்தை சிந்தாத்துரை அஜந்தன் அவர்களின் “தேவதைகளின் விரல்கள்” நூல் வெளியீட்டு நிகழ்வு வைகாசி மாதம் 09ஆம் திகதி சனிக்கிழமை புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலய வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து நூலை வெளியிட்டுவைக்க நூலுக்கான அறிமுக உரையை யாழ். பல்கலைக்கழக முன்னைநாள் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் சிவலிங்கராஜா அவர்களும், ஆய்வுரையை திருமறைக்கலாமன்ற பிரதி இயக்குநர் திரு. யோசப் ஜோண்சன் ராஜ்குமார் அவர்களும் வழங்கியிருந்தனர்.
யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு. சிவஞானம் சிறிதரன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பங்குமக்கள், தமிழ் ஆர்வலர்களென பலரும் கலந்துகொண்டனர்.
மானிட வாழ்வியல் சார்ந்த விடயங்களை உள்ளடக்கியதாக இந்நூல் அமைந்துள்ளது.

