யாழ். மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட யாழ் மறைக்கோட்டப் பங்குகளின் அன்பிய ஊக்குவிப்பாளர்களுக்கான அன்பிய பயிற்சியும் ஒன்றுகூடலும் வைகாசி மாதம் 02ஆம் திகதி சனிக்கிழமை யாழ். புனித மரியன்னை பேராலய ஆயர் ஜஸ்ரின் மண்டபத்தில் நடைபெற்றது.

மறைக்கோட்ட அன்பிய இணைப்பாளர் கிளறேசியன் சபை அருட்தந்தை இதயராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழு இயக்குனர் கிளறேசியன் சபை அருட்தந்தை றொனால்ட் சுஜீவன்; மற்றும் அன்பிய ஆணைக்குழு வளவாளர்கள் கலந்து அன்பிய ஏழு படிமுறை தொடர்பாகவும் அன்பிய வாழ்வு தொடர்பாகவும் கருத்துரைகள் வழங்கினர்.

கருத்தமர்வு நிறைவில் திருவிவிலிய ஆசீர்வாதம் இடம்பெற்றதுடன் இந்நிகழ்வில் 58 அன்பிய ஊக்குவிப்பாளர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

இவ் அன்பிய பயிற்சிகள் வைகாசி மாதம் 30ஆம் திகதி தீவக மறைக்கோட்டத்திலும் ஆனி மாதம் 20ஆம் திகதி முல்லைத்தீவு மறைக்கோட்டத்திலும் ஆனி மாதம் 27ஆம் திகதி இளவாலை மறைக்கோட்டத்திலும் ஆடி மாதம் 04ஆம் திகதி கிளிநொச்சி மறைக்கோட்டத்திலும் ஆடி மாதம் 25ஆம் திகதி பருத்தித்துறை மறைக்கோட்டத்திலும் முன்னெடுக்கப்படவுள்ளன.

By admin