யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழக கூட்டம் வைகாசி மாதம் 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
கழக இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கழக தலைவர் திரு. ஜெகின் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் அருட்தந்தை மவுலிஸ் அவர்களால் “பொதுநிலையினரின் திருத்தூது பணிகளுக்கான தளங்கள்” என்னும் தலைப்பில் கருத்துரை வழங்கப்பட்டது.
தொடர்ந்து கழக எதிர்கால செயற்றிட்டங்கள் தொடர்பாகவும் 2026ஆம் ஆண்டிற்கான பொதுநிலையினர் கழக வருடாந்த மாநாடு தொடர்பாகவும் மறைக்கோட்டங்களின் பொதுநிலையினர் கழக செயற்குழு தெரிவு பற்றியும் கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

