யாழ். மறைமாவட்ட மறைக்கோட்டங்களில் பணியாற்றும் அன்பிய இணைப்பாளர்களுக்கான கூட்டம் வைகாசி மாதம் 04ஆம் திகதி திங்கட்கிழமை கிளாரட் அக கிளரேசிய இல்லத்தில் நடைபெற்றது.

மறைமாவட்ட ஆணைக்குழு இயக்குநர் கிளறேசியன் சபை அருட்தந்தை றொனால்ட் சுஜீவன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் ஆணைக்குழுவின் கடந்தகால எதிர்கால திட்டங்கள் தொடர்பாகவும் வைகாசி மாதம் 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்படவுள்ள அன்பிய ஞாயிறு தினம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

இந்நிகழ்வில் யாழ். மறைக்கோட்ட இணைப்பாளர் அருட்தந்தை இதயராஜ், கிளிநொச்சி மறைக்கோட்ட இணைப்பாளர் அருட்தந்தை நிலான் ஜுலியஸ், முல்லைத்தீவு மறைக்கோட்ட இணைப்பாளர் அருட்தந்தை அஜந்தன், பருத்தித்துறை மறைக்கோட்ட இணைப்பாளர் அருட்தந்தை ஜோன் குருஸ், தீவக மறைக்கோட்ட இணைப்பாளர் அருட்தந்தை லியான்ஸ் ஆகியோர் பங்குபற்றியதுடன் யாழ். மறைக்கோட்ட புதிய இணைப்பாளரான அருட்தந்தை ஜோண் எமில்ரன் அவர்களுக்கான வரவேற்பும் இடம்பெற்றது.

By admin