வட்டக்கச்சி புனித சூசையப்பர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ராஜ் டிலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் வைகாசி மாதம் 01ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சித்திரை மாதம் 22ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 30ஆம் திகதி வியாழக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை கிளிநொச்சி மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை ஜெயக்குமார் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை செபமாலை பெரேரா அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

