நெதர்லாந்து தமிழ் கத்தோலிக்க பணியகம் முன்னெடுத்த மருதமடு அன்னை குடியிருக்கும் பெனு அன்னை புனித நீர் ஊற்றை நோக்கிய 28ஆவது தமிழர் திருயாத்திரை பணியக இயக்குநர் அருட்தந்தை ஜோ அவர்களின் ஒழுங்குபடுத்தலில் வைகாசி 09ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.

அன்றைய தினம் காலை திருகோணமலை மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை போல் றொபின்சன் அவர்களின் குணமளிக்கும் நற்கருணை ஆராதனையும் மதியம் புனித நீரூற்றை நோக்கிய பவனியும் மருதமடு அன்னையின் சிற்றாலயத்தில் வழிபாடும் தொடர்ந்து மாலை திருவிழா திருப்பலியும் நடைபெற்றன.

திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

அத்துடன் 08ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை பெனு அன்னை காட்சி கொடுத்த சிற்றாலயத்தில் திருப்பலியும் தொடர்ந்து இளையோருக்கான ஆராதனையும் முன்னெடுக்கப்பட்டன.

இவ்வழிபாடுகளில் புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் இறைமக்கள் பலரும் பக்தியுடன் பங்குபற்றியிருந்தனர்.

By admin