யாழ். மறைமாவட்ட குருவும் ஜேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியக இயக்குநருமான அருட்தந்தை நிருபன் நிஸானந்த் தார்சீசியஸ் அவர்களின் “புகழ்ச்சியும் மாட்சியும்” நூல் வெளியீடு சித்திரை மாதம் 28ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள திருமறைக்கலாமன்ற கலைத்தூது கலையகத்தில் நடைபெற்றது.
கொழும்புத்துறை புனித சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி அதிபர் அருட்தந்தை பெற்றூஸ் தயாபரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து நூலை வெளியிட்டுவைக்க நூலுக்கான அறிமுக உரையை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பொதுமக்களென பலரும் கலந்துகொண்டனர்.
மாதாவின் மன்றாட்டு மாலையின் ஒவ்வொரு மன்றாட்டிலும் அடங்கியுள்ள ஆழமான விவிலிய இறையியல் விளக்கங்களை தாங்கியதாக இந்நூல் அமைந்துள்ளது.

